போராடி வாங்கவும் துப்பில்லை,வாங்கித் தந்ததை பாதுகாக்கவும் துப்பில்லை....
அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருந்த வரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உரிமைகள் பறிபோகாமல் காத்து நின்றோம்.
இன்று 142 அடி வரை நீர் தேக்க விடாமல் அவசரஅவசரமாக உபரி நீரை வெளியேற்றி வருகிறது. விடியல் அரசு கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கிறது.
கேரள முதல்வரை சந்தித்து, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் தமிழ்நாடு, கேரளா இடையே பிரச்சினை நிலவுகிறது. பரம்பிக்குளம்-ஆழியார் திட்டம், நெய்யாறு ஆகிய நதிகள் விவகாரத்திலும் இரு மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது, இதெல்லாம் சீர்செய்ய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இன்று ஏதாவது பேச்சுவார்த்தை நடக்கிறதா?
நீர் தேக்குவதில் கூட உறுதியான நிலைப்பாடு இல்லாத விடியல் அரசு, அடுத்து 1,500 கோடியில் புதிய அணை கட்டும் பணி ஜரூராக நடத்தி வருகிறது கேரளா.
தமிழ்நாட்டின் நலன் மீதும் தமிழர்களின் நலன் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் துரிதமாக செயல்பட்டு தடுத்திருக்க வேண்டும், ஆனால் இன்று என்ன நடக்கிறது?
இனிப்பு வாங்குவதில் ஊழல், பேருந்து கொள்முதல் செய்வதில் ஊழல், பட்டாணி ஊழல், கோதுமை ஊழல் என ஊழல் செய்வதில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்களே தவிர, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதில் அக்கறை செலுத்துவதே இல்லை.