ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர்களை ஜோதி பவுண்டேஷன் காப்பகத்தில் சேர்த்தனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர்களை ஜோதி பவுண்டேஷன் காப்பகத்தில் சேர்த்தனர் மயிலாடுதுறை நகர் முழுவதும் தினசரி சாலையோர பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு காலை உணவும் வழங்கும் வேலையை ஜோதி பவுண்டேஷன் செய்து வருகிறது இன்றைய தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வாசலில் உடல்நிலை சோர்வுற்று மிகவும் வயதான நிலையில் இரண்டு பெண்மணிகள் இருப்பதாக ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர் திரு பழனிச்சாமி அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவுகள் வழங்கி அவர்களிடம் தகவல்கள் கேட்டறிந்தார் பிறகு காப்பகத்தில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர் மற்றும் ஜோதி பவுண்டேஷன் இணைச்செயலாளர் பக்கிரிசாமி மற்றும் கர்ண சூரியோதயம் அறக்கட்டளை நிறுவனர் வினோத் குமார் இணைந்து உடனடியாக அந்தப் பெண்மணிகளின் உடல்நிலை மற்றும் உறவினர்களின் தகவல்கள் கேட்கப்பட்டு உரிமை கோரும் நிலையில் யாரும் இல்லாத காரணத்தினால் அந்த பெண்மணியிடம் பேசு நாம் பேசுவதை கேட்கின்ற நிலையில் சுய நினைவில் அவர்கள் இருந்ததால் அவர்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு காப்பகத்தை தொடர்புகொண்டு இறுதியாக திருநாகேஸ்வரம் அருகில் உள்ள ஒரு காப்பகத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலை கொஞ்சம் தெளிவு அடைந்தவுடன் அவருடைய உறவினர்களை தொடர்புகொண்டு அவர்கள் ஒப்படைத்து விடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் மனிதம் காக்கப்படவேண்டும் என்ற தாரக மந்திரத்திற்கு கேற்ப செயல்பட்டு வரும் ஜோதி பவுண்டேஷன் செயல்பட்டு வருவதை பொதுமக்களும் தன்னார்வலர்களும் ஆட்டோ ஓட்டுனர்களும் தரைக்கடை வியாபாரிகளும் தங்களுடைய கண்ணீர் மல்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.