தமிழக முதலமைச்சரின் உத்தரவை மதிக்காத அரசு பள்ளிகள்
நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளது.
இதற்காக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமக்கள் தொடங்கி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் என அனைவரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஆங்காங்கு அனைத்து வகை பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று corona விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா பள்ளி மாணவர்களை வரவேற்பதற்கு பள்ளிகள் தயாராக இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட பதினெட்டு மாதங்கள் கழித்து பள்ளிக்கு வருகை தர உள்ள மாணவர்களை வரவேற்க அந்தந்த பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பள்ளிகளில் அமர வையுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் இதற்கான எந்த ஒரு முயற்சியையும் பல அரசுப் பள்ளிகள் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக இவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா இல்லையா என்று ஆர்வத்துடன் கேட்கும் மாணவர்களுக்கு இவர்கள் தரும் பதில் அதிர்ச்சியாக உள்ளது.
நவம்பர் 1ம் தேதி எல்லாம் வகுப்புகள் கிடையாது எட்டாம் தேதி முதல் தான் முழுமையாக வகுப்புகள் தொடங்கப்படும் என்று நேரடியாக பள்ளிகளுக்கு வந்து கேட்கின்ற மாணவர்களுக்கும் தொலைபேசியில் கேட்கின்ற மாணவர்களுக்கும் தகவல் தெரிவித்து வருகிறார்கள்.
இத்தனை நாள் நவம்பர் 8ஆம் தேதி முதல் தான் பள்ளிகள் செயல்படும் என்று அனைத்து பெற்றோர்களும் மாணவர்களும் நம்புகின்றனர். பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இப்படித்தான் அறிவிப்பு செய்து வருகின்றனர் அவர்களின் இந்த போக்கு முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் உத்தரவை காலில் போட்டு மிதிக்கின்ற என்ற வகையில் அமைந்துள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போது மூன்று நாட்கள் கழித்து தீபாவளி வருகிறது எனவே தீபாவளி முடிந்த பிறகு பள்ளிகளை திறங்கள் என்று பெற்றோர்கள் பொதுமக்கள் கேட்கிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி கோரிக்கை வைத்தது இவர்கள்தான்.
இப்போது இவர்கள் இப்படி செய்வது எப்படி இருக்கிறது என்று சொன்னால் நாங்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லை எனவே நீங்கள் சொல்வதை நாங்கள் ஏன் கேட்க வேண்டும் என்பது போல் உள்ளது.
அதுவும் இல்லாமல் இந்த அரசு எங்களால் உருவானது. எனவே எங்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்கிற எகத்தாளமாக தான் உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்...?