தங்க நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட்செய்யும் தமிழகஅரசின் முடிவுக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்பாட்டம்

தங்க நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட்செய்யும் தமிழகஅரசின் முடிவுக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்பாட்டம்


தேனி மாவட்டம்     இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட்செய்யும் தமிழகஅரசின் முடிவுக்கு எதிர்ப்புத்தெரிவித்து கோஷம் எழுப்பினர். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், நகைகளில் பதிக்கப்பட்டுள்ள வைரகற்களை அரசு என்ன செய்யப்போகிறது? என்றும் கேள்வி எழுப்பினர். கோவில் சொத்துக்கள் கொள்ளைபோக வழிவகைசெய்யும் அரசின் இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தேனி மாவட்ட செய்திக்கா வெள்ளைச்சாமி