ராமநாதபுரம் மாவட்டவங்கிகள் இணைந்து நடத்திய வாடிக்கையாளர் மெகா விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம் மாவட்டவங்கிகள் இணைந்து நடத்திய வாடிக்கையாளர் மெகா விழிப்புணர்வு முகாம்


ராமநாதபுரம் அக்-25

ராமநாதபுரம் மாவட்டவங்கிகள் இணைந்து நடத்திய வாடிக்கையாளர் மெகா விழிப்புணர்வு முகாம் 25.10.2021 நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள் நபார்டு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகள் ஒருங்கிணைந்து வாடிக்கையாளர்களின் நலன் கருதி மேகா விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை ஏற்று குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார். இதில் விவசாயக்கடன், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா உள்ளிட்ட கடன்கள் தெரடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

 இம்முகாமில் l.0.B தூத்துக்குடி முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீராம் வரவேற்புரை ஆற்றினார். பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் மாருதி ராவ் மற்றும் அரசுத்துரை மேலாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் 400 பயனாளிகளக்கு 21 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரம் ரூ காண கடன்களை சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.A.M. காமாட்சி கணேசன் அவர்கள் வழங்கினார்கள். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கார்த்திகேயன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது. 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு