ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முறைகேடு கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முறைகேடு கண்டித்து ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் களுக்காக போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களில் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி முருகன் என்பவர் 974 வாக்குகளும் கிளாப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா விஜயகுமார் என்பவர் 1411 வாக்குகளும் பெற்ற நிலையில் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி முருகன் என்பவரை வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளார்கள் இதனை கண்டித்து அம்பிகா விஜயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முற்றுகையிட்டு நியாயம் கிடைக்கவில்லை என்றால் குடும்பத்தோடு  தற்கொலை செய்து கொள்வோம் கண்ணீர் மல்க வேண்டி நின்றனர்.

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்ஜி . முருகன்