பவானியில் 33 கிலோ ஹான்ஸ் போதை பொருள் பறிமுதல்.
ஈரோடு மாவட்டம் பவானி புதுப்பாளையத்தில் நெல்லை கீர்த்தனா மளிகை கடை வைத்திருக்கும் வரதராஜன் என்பவர் சட்டவிரோதமாக ஹான்ஸ் போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பவானி காவல் ஆய்வாளர் கண்ணன் அதிரடி ஆய்வு நடத்தியதில் 13,500 மதிப்புள்ள 33 கிலோ ஹான்ஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் வரதராஜன் ஜலகண்டபுரத்தில் உள்ள சுரேஷ் என்பவரிடமிருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகள் வாங்கி விற்றதாக தெரியவந்தது. இதனடிப்படையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்றதால் வரதராஜனை கைது செய்து கோபி கிளை சிறையில் அடைத்தனர். வியாபாரி சுரேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார் . அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மேலும் பவானி தாசில்தார் மூலம் வரதராஜனின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட செய்தியாளர் யோகேஸ்வரி