பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பாம்.

 பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பாம்.


அவர்கள் விரும்புவதெல்லாம்,

பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான இவர்கள் முன் போய் கை கட்டி நிற்க, அவர் நம்மை உட்கார வைத்து,

முதலில் எந்தவிதமான பட்டா?

1. Simple Transfer Patta அதாவது வெறும் பெயர் மாற்ற பட்டாவா?

2. RPT பட்டாவா ?

3. Sub-Division பட்டாவா?

என்பதை ஆய்ந்து அதற்குத் தக்கவாறு,

யார் யாருக்கு எவ்வளவு?

அதாவது VAO க்கு எவ்வளவு, R.I க்கு எவ்வளவு, சர்வேயருக்கு எவ்வளவு, ஹெட் சர்வேயருக்கு எவ்வளவு, A.T க்கு ,D.T க்கு எவ்வளவு, கடைசியாக தாசில்தாருக்கு எவ்வளவு என கூட்டல் கணக்கெல்லாம் நமக்கு கற்றுக் கொடுத்து விட்டு,

அப்பாவியாய் முகத்தைக் காட்டி பேரம் பேசிப் பேசி, சொத்தின் மதிப்புக்கும், விஸ்தீரணத்திற்குத் தக்க லஞ்சத் தொகையை அவர் நிர்ணயம் செய்து நம்மிடம் கோரிக்கை வைக்க, நாமும் உள்ளுக்குள் மனம் நொந்து, வெந்து, சகித்து பணிவுடன் பேரம் பேசி,

அவர்களது மனம் நோகா வண்ணம் சில/ பல ஆயிரங்களைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, அழுகையுடன் அட்வான்ஸ் கொடுத்து விட்டு, அவர்களின் பின் நடையாய் நடந்து செருப்பு தேய்ந்த பின் அவர்கள் நம் மீது கருணை காட்டி காசைக் கறாராக கறந்து கொண்டு,  நம் சொத்துக்கு, நம் பெயரில் பட்டாவைத் நம் கையில் திணித்து அனுப்புவதுதான் VAO க்கள் விரும்பும் சிறந்த முறையாம். 

அதை விடுத்து பத்திரப் பதிவு முடித்த உடன் பட்டாவைக் கைமேல் பெறலாம் என்று மக்களுக்கு வசதி செய்தால், லகரங்களில் அவர்கள் இழக்கும் லஞ்ச வருவாயை எவ்வாறு ஈடு செய்வது ?

தங்கள் தினசரி வருமானத்தை விட்டுக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யும் அளவுக்கா   அரசு ஊழியர்களை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்?

ஆனாலும் மக்கள் நலனுக்கான அரசு திட்டத்தை லஞ்சம் கிடைக்காது என்ற காரணத்தால் எதிர்க்கும் அளவுக்கு VAO க்கள் தைரியசாலிகளாக இருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும் !

மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !!

நம்மிடம் கொள்ளையடிக்க vao க்கள் வெளிப்படையாக அரசின் மக்கள் நலத்திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்றால் யார் ஏமாளிகள் என்று  புரிந்து *VAO போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள். சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிருங்கள்....*

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்