இலவச covid-19 தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் செப்-02
ராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடமியும், ராமநாதபுரம் கோல்டு அரிமா சங்கமும், இணைந்து இலவச covid-19 தடுப்பூசி முகாம் இன்று காலை தேவிபட்டினம் ரோடு வெண்குளம் கிராமத்திலுள்ள ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை ராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகடாமியின் பள்ளித் தாளாளர் மருத்துவர் I. மன்சூர், ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளிச்செயலாளர் மருத்துவர் H. நூருல் ஹவ்வா ஆகியோர், துவக்கிவைத்தார்கள். ராமநாதபுரம் கோல்டு அரிமா சங்க செயலாளர் அரிமா ஆர். சந்தானம், வரவேற்புரை நிகழ்த்தினார். ராமநாதபுரம் கோல்ட் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா சீனிவாசலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்.வி. எபினேசர் செல்வராஜ், மற்றும் தேவிபட்டினம் மருத்துவர் ஆண்ட்டன் சாஹாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
ஷிபான் நூர் குளோபல் அகாடமியின் முன்னாள் சிறப்பு அலுவலர் அரிமா சீனிவாசன் மற்றும் ஷிபான் நூர் குளோபல் அகாடமி முதல்வர் திருமதி. நிவேதினி அவர்களும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். ராமநாதபுரம் கோல்ட் அரிமா சங்கத்தின் பொருளாளர் மணிகண்டன் நன்றி உரையாற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச தடுப்பூசியை போட்டுக் கொண்டார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

