விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம்

விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் 


செப்-27 

விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயத்தின் மீதான உரிமையையும் வருமானத்தையும் தரித்துக் கொள்ள கடந்த கொரோனா  பாதிப்பை தனக்கு வாய்ப்பாகி அவசரகதியில் 3 சட்டங்களை இயற்றி உள்ள ஒன்றிய பாஜக அரசு அன்னிய முதலீட்டை தருவது என்ற ஒரே காரணத்திற்காக இந்திய விவசாயத்தையும் இப்பொழுது கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கிறது பாஜக அரசு. அதற்காக அவசரகதியில் பாராளுமன்ற மாநிலங்களவை குழப்பத்தை ஏற்படுத்தி முறைகேடான வழியில் மசோதாவை நிறைவேற்றி வேளாண் சட்டங்கள பாதுகாக்க கொண்டுவந்துள்ளது. இதனை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் கிழக்கில் சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் இன்று காலை அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.

. இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜலீல் மாவட்ட செயலாளர்கள் அப்துல் கலாம் ஆசாத் நஜிமுதீன் மாவட்ட பொருளாளர் அசன் அலி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது சுலைமான் நூர் ஜியாவுதீன் எஸ்டிடி தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர் இதற்கான ஏற்பாட்டினை ஊடகப் பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு