அசாம்,அடக்குமுறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 அசாம்,அடக்குமுறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் அரசு பேருந்து பணிமனை முன்பு ராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக சார்பில் அசாம் அடக்குமுறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மற்றும் மமக மாவட்ட தலைவர் M.சரீப் அவர்கள் தலைமையில், நடைபெற்றது. முன்னதாக தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் எம். சுலைமான் அவர்கள், கிராத் ஓதினார். மமக நகர செயலாளர் முஹம்மது அமீன் வரவேற்புரையாற்றினார். பட்டாணி மீரான், உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,

 தமிழ் புலிகள் அமைப்பு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ரஞ்சித் மற்றும் ராமநாதபுரம் சிறு வியாபாரிகள் சங்க தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.  சிறப்பு கண்டன உரையை ராமநாதபுரம்  தமுமுக பேச்சாளர் முஜாஹித் ஆலிம் அவர்கள் கண்டன உரையை  நிகழ்த்தினார். தமுமுக மமக மாவட்ட பொருளாளர் பாம்பன் ஹமீது சபிக் அவர்கள், நன்றி உரையாற்ற அசாம் அடக்குமுறையை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் முடிவு பெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு