ராமநாதபுரம் ராசி ஹாஸ்பிடல் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை இணைந்து இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்

ராமநாதபுரம் ராசி ஹாஸ்பிடல் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை இணைந்து இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்


 ராமநாதபுரம் செப் - 18

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் சின்னக்கடை தெருவில் அமைந்துள்ள  ராசி ஹாஸ்பிடல் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை இணைந்து இன்று இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம் குழந்தை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர். ரம்யா ஸ்ரீ எஸ்  ஆலோசனைகள் வழங்கினார். இதில் ராசி ஹாஸ்பிடல் மருத்துவமனை மருத்துவர் ஃபாருக், மருத்துவர் நசார் அலி முன்னிலையில், வருகை தந்த நோயாளர்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இருதய நோய் உள்ள குழந்தைகள் மற்றும் பிறவி இருதய குறைபாடு உள்ளவர்கள் ராமநாதபுரம் வெளிப்பட்டிணம். உள்ள ராசி மருத்துவமனையை அணுகவும்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு