உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை....

 உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை....

வாலாஜாபேட்டை மின்வாரியத்துக்கு உட்பட்ட  வாலாஜா நகரின் பிரதான தெருவின் அருகில் உள்ள பரசுராமன் தெருவில் உள்ள மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது மேலும் heavy line cables மின் ஒயர்கள் மிக தாழ்வாக செல்கிறது  அருகில் விநாயகர்கோயில் மற்றும் மெயின் பஜார் ஆக உள்ள அணைக்கட்டு ரோடு பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருக்கள் ஆகும் மின் கம்பம் விழும் நிலையில் உள்ளதால் வாலாஜா மின்கம்பம் மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து  மின் கம்பத்தை மாற்றி சரி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அணைக்கட்டு ரோடு பரசுராமன் தெரு குடியிருப்போர் சார்பில் மின் வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறார்கள்.... இது சம்பந்தமாக பல முறை மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் உடைந்து விழுந்தால் பல விபத்துக்கள் நேரிடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர் விபத்து ஏற்படும் முன்  மின்கம்பத்தை மாற்றி அமைத்து தர மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர் செவிசாய்க்குமா இந்த வாலாஜாபேட்டை மின்சார வாரியம்....?

 மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.