இனி பான் கார்டு பெற தந்தை பெயர் அவசியமில்லை

 இனி பான் கார்டு பெற தந்தை பெயர் அவசியமில்லை

புதுடில்லி : வருமான வரித்துறை விதி எண் 114 ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வரைவு அறிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, தாயுடன் இருப்பவர்கள் பான் கார்டு பெறுவதற்கு தந்தையின் பெயரை குறிப்பிடுவது அவசியமில்லை. 

தாய் மட்டும் வளர்க்கும் பான் கார்டு விண்ணப்பதாரர்கள் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. தற்போதுள்ள விதியின்படி தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயமாக உள்ளது.

பான் கார்டு பெற தந்தையின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற விதியை தளர்த்தி கொள்ளும்படி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

இந்த சிக்கலை களைவதற்காக மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இது தொடர்பான விமர்சனங்களையும்,   கோரிக்கைகளையும் செப்.,17 ம் தேதி வரை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.