ஓசூரில் பிற கட்சிகளில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த இளைஞர்கள்!

 ஓசூரில் பிற கட்சிகளில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த இளைஞர்கள்!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம்  பாட்டாளி மக்கள் கட்சி (தெற்கு) சிறப்புக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட  பாமக முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான முனிராஜ்  கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.  மாவட்ட துணைத் தலைவர் தொழிலதிபர்  சொக்கலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.  மாவட்ட செயலாளர்   கோவிந்தராஜ் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பங்கேற்க இயலவில்லை.  

நிகழ்வில்...  பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முனைவர் ஷேக் முகைதீன் அவர்களின் ஆலோசனையின் பேரில் ...மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் காதர்பாஷா அவர்களின் ஏற்பாட்டின்பேரிலும் பிற கட்சிகளிலிருந்து விலகி பலர் தங்களைப்  பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.  சமத்துவ மக்கள் கட்சியில் மாவட்ட துணைச் செயலாளராக இருந்த ஃபாருக் கான்,     சமத்துவ மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டேனியல்,  குருப்பட்டி அப்பாஸ், அலி சானசந்திரம் ரவி,  தின்னூர் விஜயகுமார் முதலானோர் தங்களைப் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி (தெற்கு) நகர செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நகர வன்னியர் சங்க செயலர் கோவிந்தன், மதியழகன் அவர்களும் வரவேற்றுச் சிறப்பு செய்தார்கள்.  பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புகளையும் மக்களுக்கான செயல் பாடுகளையும்  சமூகங்களின் உயர்வில் பாமகவின் பங்கையும் தமிழகத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர்  மருத்துவர் அய்யாவைப் பற்றியும் எடுத்துரைத்தார் தமது உரையில் முனிராஜ்.  சின்னசாமி நன்றியை வழங்க நிகழ்வு இனிதே முடிந்தது,