தியாகராஜன் பதவி காலியாகுமா ...?எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள்....!!

 தியாகராஜன் பதவி காலியாகுமா ...?எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள்....!!


.முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த புதிதில் அதிகமாக பேசப்பட்டவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அவரது படிப்பு, தமிழக அரசியலில் நீதிக் கட்சி காலத்திலிருந்து தொடரும் அவரது குடும்ப பாரம்பரியம், நிதித்துறையில் அவரது உலகளாவிய அனுபவம் என ரொம்பவே கொண்டாடப்பட்டவர். ஆட்சி பொறுப்பேற்ற அன்றே நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அதிரடி காட்டினார். 

தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க சர்வதேச அறிஞர்களைக் கொண்ட குழுவை அமைத்ததிலும் பிடிஆரின் பங்கு முக்கியமானது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் நிதித்துறைக்கு இவ்வளவு நிபுணத்துவம் கொண்ட அமைச்சர் இதற்கு முன் கிடைத்ததில்லை என்றும் கூறப்பட்டது. இப்போதுவரை பிடிஆர்தனது துறை சார்ந்து முன்வைக்கும் கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. தமிழ்நாட்டின் நிதி நிலைமையை எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் பிடிஆர் மீட்டெடுத்துவிடுவார் என்கிறார்கள்.

துறை ரீதியாக நிதியமைச்சரின் செயல்பாட்டில் விமர்சனங்கள் இல்லை, ஆனால் எதிர்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு சமூகவலைதளங்கள் மூலமாகவும், பேட்டிகள் மூலமாகவும் அவர் அளிக்கும் பதில்கள் தான் விமர்சனங்களை சந்திக்கின்றன. மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என தரவுகளோடு பிடிஆர் பல இடங்களில் பேசியுள்ளதால் ஆரம்பம் முதலே பாஜகவினர் பிடிஆரை கார்னர் செய்து வந்தனர்.

உடனடியாக கோபப்பட்டு வார்த்தைகளைவிடுவதை பிடிஆர் வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் அதை பாஜக, அதிமுகவினர் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு அமைச்சர் செல்லாததை பிரச்சினையாக மாற்றினர். அதற்கு பதிலளிக்கிறேன் பார் என பிடிஆரும் சர்ச்சைக் கூண்டில் தானாகவே போய் உட்கார்ந்துவிட்டார் என்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பிடிஆர் சொந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி மேலும் பாயத் தொடங்கியதால் ஸ்டாலின் உடனடியாக முக்கிய முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது விட்ட வார்த்தைகள் பெரும் விமர்சனங்கள் ஆகவும் சர்ச்சையாகவும் வெடித்து வருகிறது.

செய்தியாளர்கள் சில திட்டங்களை குறிப்பிட்டு அதையெல்லாம் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டதற்கு எந்த தேதியில் நிறைவேற்றுகிறோம் என்று சொன்னோமா என்கிற பதிலும், நான் என்ன அமைச்சர் பதவி கேட்டேனா என்பன போன்ற பதில்களும் மு க ஸ்டாலின் ஐயே முகம் சுளிக்க வைத்துள்ளது.

சட்டமன்றத்தில் இவர் பேசிய சில பேச்சுக்கள் சபை நடுவில் முதல்வரையே முகம் சுளிக்க வைத்துள்ளது. அதுவும் இல்லாமல் மூத்த அமைச்சர்கள் பலருக்கு இவரை பிடிக்கவே இல்லை. இவரின் செயல்பாடு குறித்து அவர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக உடன்பிறப்புக்களே கூறுகின்றனர்.

எனவே விரைவிலேயே அவர் அமைச்சர் பதவியில் இருந்து விளக்க படுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் ஜெயலலிதாவை போல் அதிரடி காட்டும் ஸ்டாலின் விரைவில் அமைச்சரவை மாற்றத்திலும் தனது அஸ்திரத்தை கையில் எடுப்பார். 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு இது நிச்சயம் நடக்கும் என்கின்றனர் உடன் இருக்கும் உடன்பிறப்புகள்.