லாபம் ஒன்றையே குறிக்கோளுடன் செயல்படும் உணவகத்தை மூட வேண்டும்

லாபம் ஒன்றையே  குறிக்கோளுடன் செயல்படும் உணவகத்தை மூட வேண்டும்

மனித மலக்கழிவு, கழிவுநீரில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆண்,பெண்  தொழிலாளர்களை  வேலை செய்ய வைத்ததும் இல்லாமல்,ஓட்டல் முன்பு கழிவுநீரில்  மனித மலக்கழிவு  கொட்டிக் கிடந்த போது அதை முறைப்படி அகற்றாமல் லாபம் ஒன்றையே ஒற்றை குறிக்கோளுடன் தொடர்ந்து ஓட்டலை நடத்தி வாடிக்கையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் பல்வேறு நோய்த் தொற்று உருவாகவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட சேலம் மாநகரம், புதிய பஸ் நிலையம் ஸ்ரீ சரவணபவன் கிளாசிக் வெஜிடேரியன் ரெஸ்டாரன்ட் கடை நிர்வாகத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைக்கு சீல் வைக்க வேண்டும்.கடை நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும் என அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநிலத் தலைவர் சேலம் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை அவர்கள் சேலம் கலெக்டர், மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மா. அருள் நேரு