தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை, உடனடியாக நிரப்பிட வேண்டும்!

 தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை, உடனடியாக நிரப்பிட வேண்டும்!

திருநெல்வேலியில், இன்று நடைபெற்ற, 32-ஆவது நெல்லை மின்திட்ட மாநாட்டில், தீர்மானம்! 

சி.ஐ.டி.யூ.சார்பிலான, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின், 32-ஆவது நெல்லை மின்திட்ட மாநாடு, திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டையில் உள்ள, ஒரு தனியார் திருமண மண்டபத்தில், இன்று (செப்டம்பர்.5) ஒருநாள் முழுவதும், நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க திட்ட தலைவர் எம்.பீர்முகம்மது ஷா தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யூ. திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செண்பகம், இந்த மாநாட்டை துவக்கி வைத்தார்.திட்ட செயலாளர் எஸ்.வண்ணமுத்து, அறிக்கை வாசித்தார்.மாநில மற்றும்  மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டின் போது, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டின்,நிறைவு நிகழ்ச்சியில், ** தமிழக மின்வாரியத்தில், காலியாக உள்ள, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை, உடனடியாக நிரப்பிடல் வேண்டும். ** 2019-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து வழங்க வேண்டிய, ஊதிய உயர்வு குறித்து, பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய உயர்வினை, விரைந்து வழங்கிட வேண்டும்.** மின்சார சீர்திருத்த சட்டம் 2021 என்பதை, நிரந்தரமாக கைவிட வேண்டும்.**  மின்துறையை,  எப்பொழுதுமே பொதுத்துறையாக,  பாதுகாத்திட வேண்டும். ** எவ்வித ஊதியமும் இல்லாமல் பணியாற்றிவரும், பகுதிநேர பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்திடல் வேண்டும். ** நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஞ்சப்படி, ஒப்படைப்பு ஊதியம் போன்றவற்றை, இனியும்  காலதாமதம் செய்யாமல், உடனடியாக வழங்கிட வேண்டும்!- ஆகிய, "தீர்மானங்கள்" நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் டி.ஜெய்சங்கர் " முக்கிய உரை" நிகழ்த்தினார். வரவேற்புக்குழு தலைவர்.ஏ.முத்தையா,  "நன்றி" கூறினார்