14 ஆண்டுகளுக்கும் மேலாக,சிறைகளில் இருந்து வரும், இஸ்லாமிய ஆயுள் கைதிகளை, அண்ணா பிறந்தநாளில் விடுவிக்கக்கோரி, போராட்டம்!
14 ஆண்டுகளுக்கும் மேலாக,சிறைகளில் இருந்து வரும், இஸ்லாமிய ஆயுள் கைதிகளை, அண்ணா பிறந்தநாளில் விடுவிக்கக்கோரி, பாளையங்கோட்டை மத்திய சிறையை, தேசிய லீக் கட்சியினர், முற்றுகையிட்டு, போராட்டம்!
செப்.4:- "தமிழக முன்னாள் முதலமைச்சர் "பேரறிஞர்" அண்ணாவின், பிறந்த தினமான, இம்மாதம் (செப்டம்பர்) 15- ஆம் தேதியன்று, இஸ்லாமிய "ஆயுள்" சிறைவாசிகள் அனைவரையும், "தமிழ்நாடு அரசு" எவ்வித நிபந்தனையுமின்றி, விடுதலை செய்திட வேண்டும்!" என்னும் கோரிக்கையினை முன்வைத்து, "இந்திய தேசிய லீக்" கட்சியினர், நேற்று (செப்டம்பர்.3) மாலையில், பாளையங்கோட்டையை "மத்திய சிறைச்சாலை"யினை, முற்றுகை இடும், "போராட்டம்" நடத்தினர். இதற்காக, மேலப்பாளையம் , தெற்கு புறவழிச்சாலை சந்திப்பு அருகில், நூற்றுக்கணக்கில் குவிந்த, போராட்டக்காரர்களை, மத்திய சிறைச்சாலையை, அவர்கள் நெருங்குவதற்கு முன்னரே, மாநகர காவல், சட்டம்- ஒழுங்கு பிரிவு, "துணை ஆணையர்" T.P. சுரேஷ் குமார் தலைமையிலான, காவல்துறையினர், அவர்களை தடுத்துநிறுத்தினர்.
. அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திலேயே, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய போராட்டக்காரர்கள், தங்களுடைய உரையில், " 14 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறைகளில் வாடும், ஆயுள் கைதிகளை, சிறைச்சாலை சட்டங்கள், 161- ஆவது விதியின் கீழ், அந்தந்த மாநில அரசுகளே, விடுதலை செய்து கொள்ளலாம்! என்னும், "உச்சநீதிமன்றம்" தீர்ப்பின்படி, இஸ்லாமிய கைதிகளை, விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர். பின்னர், சிறிது நேரம் "கோஷம்" போட்ட பிறகு, போராட்டக்காரர்கள் அனைவரும், கலைந்து சென்றனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக நிகழ்ந்த, இந்த போராட்டத்தினால், திருநெல்வேலி- அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், "போக்குவரத்து" வெகுவாக பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு, "இந்திய தேசிய லீக்" கட்சியின், மாநில தலைவர் " தடா" ரகீம், தலைமையில், மாநில பொதுச்செயலாளர் ராஜாஉசேன், மாநில பொருளாளர்" முள்ளான்" செய்யதுஅலி மற்றும் பல்வேறு, இஸ்லாமிய அமைப்புகளின் "நிர்வாகிகள்", இந்த போராட்டத்தில், கலந்து கொண்டனர்.