அரசு ஊழியர்களை அசத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்; 110 விதியின் கீழ் 14 முக்கிய அறிவிப்புகள்...

அரசு ஊழியர்களை அசத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்; 110 விதியின் கீழ் 14 முக்கிய அறிவிப்புகள்...


ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது

🔵1/1/2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்

முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிப்பு

🔵அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

🔵2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்

🔵ஒழுங்கு நடவடிக்கை காரனமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்

🔵அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்

🔵புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

🔵அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும்

🔵சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும்

🔵அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்

🔵வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும்

🔵அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்க நடவடிக்கை மற்றும் அதனால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்

முதலமைச்சரின் 110 விதியின் 14 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது