HUID CODE சட்டத்தை நீக்க வேண்டும் என்று தேசிய அளவில் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை

HUID CODE சட்டத்தை நீக்க வேண்டும் என்று தேசிய அளவில் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை


ராமநாதபுரம் ஆகஸ்ட்-23 

ராமநாதபுரம் மாவட்டம். ராமநாதபுரம்  நகைக்கடை பஜாரில் தங்கம், வெள்ளி  வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய அரசு கொண்டுவந்த HUID CODE சட்டத்தை நீக்க வேண்டும் என்று தேசிய அளவில் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறித்தி, அவரவர் கடைகளுக்கு முன்பாக நின்று பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நகர் தலைவர் யோகம் ரவீந்திரன் தலைமையிலும், நகர் பொருளாளர் சிவக்குமார், செயலாளர் லெட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது. எவரெஸ்ட் ஜூவல்லரி உரிமையாளர்  N.A.வாசுதேவன், துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும், இந்த போராட்டத்தில்  கலந்து கொண்டனர்.

 ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளா N.A. ஜெரினா பானு