லஞ்ச ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'

 லஞ்ச ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'


பெரம்பலுார்; விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு, 40 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கொள்முதல் நிலைய ஊழியர்கள் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

அரியலுார், குழுமூர் கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு, பணிபுரியும் நிலைய அலுவலர் வரதராஜன், உதவி அலுவலர் சிவசக்தி ஆகியோர், பெண் விவசாயி வள்ளியம்மை என்பவரிடம், 62 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய, மூட்டைக்கு, 40 ரூபாய் வீதம், 2,480 ரூபாயை லஞ்சமாக வாங்கினர்.

வள்ளியம்மையின் உறவினரான, மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த அமுத கண்ணன், மேற்கண்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார்.

இதற்கு அவர்கள், லஞ்சம் பெற்றதை நியாயப்படுத்தும் விதமாக பேசிய வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, வரதராஜன், சிவசக்தி ஆகியோர், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.