ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்று

 ராமநாதபுரம் ஆகஸ்ட்-29 


ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்று

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணம் ஊராட்சி தலைவியாக வெற்றி பெற்று பணி புரிந்து வருபவர் திருமதி. அக்பர் ஜான் பீவி இவர் மக்களுக்கு ஆற்றும் சிறந்த தொண்டின் காரணமாக பெரியபட்டணம் ஊராட்சியில் அவருடைய செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகின்றது,

தன்னுடைய சீறிய பணிக்காக முன்னாள் ஆட்சியர் வீரராகவ் ராவிடம் நற்சான்று பெற்றார், மேலும் ஒரு காலத்தில் மிகவும் சிறப்பாக நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டார் இதனால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அரசு அலுவலர்கள் தங்களது முகநூலில்  பெரியபட்டணம் ஊராட்சி நிர்வாகத்தை ஆதரித்து பதிவு செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு