திருச்சுழியில் அரசு கலைக்கல்லூரி அமைத்ததற்கு நன்றி தெரிவித்த எம்.பி.
ராமநாதபுரம் ஆகஸ்ட் - 28
ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி எம்.பி. அவர்கள். தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்கள் அதில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சுழியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு அரசிற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கும் கலைக்கல்லூரி அமைய பெரும் பங்காற்றிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அன்பிற்கினிய மாமா திரு தங்கம் தென்னரசு அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
