பட்டணம்காத்தானில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பட்டணம்காத்தானில்  கிருஷ்ண ஜெயந்தி விழா

 ராமநாதபுரம் ஆகஸ்ட்-30 

பட்டணம்காத்தானில்  கிருஷ்ண ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்தான் கிராமத்தில் 25-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. முதலவதாக சிறப்பு பூஜை மற்றும் பால்குட ஊர்வலத்துடன் விழா துவங்கியது, இதையடுத்து நாளை மதியம் (31.08.2021) கண்ணபிரான் உறியடி உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதை எடுத்து இரவு தேரோட்டம் நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு விழா முன்னிலையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வழக்கறிஞர் திரு.எ.ரவிசந்திர ராமவன்னி,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறியை அடிப்பவர் கே.எஸ். அய்யனார். உறி கயிறு இழுப்பவர் எம். மணிகண்டன் தேரோட்டி கே.பி. உதயகுமார், இதற்கான ஏற்பாட்டினை பட்டணம்காத்தான்  யாதவர் சங்க தலைவர் கே.கே. சாத்தையா, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எம். ஜெகதீஷ். துணைத் தலைவர் ஆர். திருப்பதி துணைச் செயலாளர் ரமேஷ் என்ற சரவணன். தண்டல் வடிவேல் ஆகியோர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர் செய்திருந்தினர். இளைஞர் அணி தலைவர் பிரபாகரன், செயலாளர் வி.வி.கே. லட்சுமன், பொருளாளர் குரு பிரகாஷ், துணைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், துணைசெயலாளர் கார்த்திக் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர். அருள்மிகு கண்ணன் கோவில் அர்ச்சகர் விஜயராகவன்  அய்யங்கார் பூஜை புனஸ்காரங்கள் செய்து இருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு