தேர்தல் அறிக்கையில் மு க ஸ்டாலின் சொன்ன ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களா....? ஏக்கத்தில் தவிக்கும் பெண்கள்ட....!!

தேர்தல் அறிக்கையில் மு க ஸ்டாலின் சொன்ன ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களா....? ஏக்கத்தில் தவிக்கும் பெண்கள்....!!

தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்த நிலையில், இப்போது அது மிகவும் ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கானது மட்டுமே என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.. பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

 பெண்களுக்கு மாதம் ரூ.1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பானது மிக முக்கிய கவனத்துடன் பார்க்கப்பட்டது.. இதே அறிவிப்பைதான் கமல்  தேர்தல் அறிக்கையில் முன்னதாகவே வெளியிட்டிருந்தார்.. திமுக 1000 ரூபாய் என்று அறிவித்ததுமே, அதிமுக 1500 ரூபாய் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது.

ஆகமொத்தம், 3 கட்சிகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான திட்டங்களை அறிவித்திருந்தனர்.. பெண்களை கவரும் வகையிலேயே, முக்கியமாக அவர்களின் வாக்குகளை பெறும் வகையிலேயே இந்த அறிவிப்புகள் பார்க்கப்பட்டன.. அதேசமயம், இந்த அறிவிப்புகள் எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியமாகும்? என்ற சந்தேகமும் எழுந்தது... இந்த சந்தேகம் திமுக தரப்பை பார்த்துதான் அப்போது பெரும்பாலும் எழுப்பப்பட்டது.

அதற்கு சில பொருளாதார நிபுணர்கள் விளக்கமும் தந்தார்கள்.. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 2.02 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன... இதன்படி, 2 கோடியே 1,50,000 மகளிர் வருவார்கள்... மீதமுள்ள 50,000 பேர் இந்த நிதியுதவியின்கீழ் வருவார்களா என்பதை ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அறிவிக்கும். இவர்களின் வங்கிக் கணக்குக்கு மாதம்தோறும் அந்த பணம் சென்றுவிடும்.. 2 கோடி வீடுகளில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் சென்று சேரும்... அப்படிப் பார்த்தால் 24,000 கோடி ரூபாய் செலவாகும்.

2020- 21-ல் தமிழ்நாடு பட்ஜெட் என்பது 3 லட்சம் கோடிக்கும் மேல்... நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி) என்பது 20 லட்சம் கோடி ரூபாய் ஆகும்... இவற்றில் 24,000 கோடிகளை செலவிடுவது மிக எளிதானது. தமிழ்நாட்டின் ஜிடிபியை ஒப்பிட்டால் இது வெறும் 1 சதவிகித தொகை மட்டுமே... பட்ஜெட்டின்படி பார்த்தால் 8 சதவிகிதம் வருகிறது... 2 கோடி மக்களுக்கு நல்லது செய்வதற்காக 8 சதவிகிதத்தை ஒதுக்குவது என்பது பெரிய விஷயமல்ல என்று ஒரு விளக்கத்தை தந்திருந்தனர்.

இதற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த 1000 ரூபாய் விவகாரம் கிளப்பப்பட்டது.. முதலில் இதை ஆரம்பித்ததே எல்.முருகன்தான்.. ஒருமுறை செய்தியாளர்களிடம் பேம்போது, "திமுகவின் ரூ.1000 திட்டம் சாத்தியமில்லை.. விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று திமுக இதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்'" என்றார்..

அதாவது, ரூ.1000 இலவசமாக தர முடியாது என்றால், ரூ.1500 எப்படி கொடுக்க முடியும், அது மட்டும் சாத்தியமாகுமா? என்று முருகன் அதிமுக பற்றி கேள்வியே எழுப்பவில்லை.. மாறாக, திமுகவை மட்டுமே அவர் விமர்சித்திருந்தார். இதற்குபிறகு, அதிமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளுமே 1000 ரூபாய் குறித்து கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்..

ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் இந்த திட்டத்தை தொடங்கவில்லை என அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட அம்சங்களை உடனடியாக நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டமும் நடத்தியது.. நிச்சயம் 1000 ரூபாய் வழங்கப்படும், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் உட்பட பலரும் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பட்ஜெட் அறிவிப்பில் இதற்கான அறிவிப்பு வரவில்லை என்று சொன்னாலும் விரைவாக அது நிறைவேற்றப்படும் அதுவும் ஏழைத் தாய்மார்களுக்கு கிடைக்கும் வகையில் செய்வோம் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார் சொன்னது செய்வார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...?!