சென்னையில் ரவுடிசம் தலை தூக்குகிறது: உடனே தடுத்து நிறுத்தவேண்டும் - வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா கோரிக்கை
சென்னையில் ரவுடியிசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வணிகர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில் சென்னை பாரிமுனையில் உள்ள கடைவீதிகளில் ரவுடிசம் அதிகரித்து விட்டதாகவும் நேரடியாக கடைகளுக்கு வந்து ரவுடிகள் மிரட்டி பணம் கேட்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள் புகார் தெரிவித்தனர். அருகிலிருந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இடமும் இதுகுறித்து உடனடியாக நீங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ‘சென்னையில் குறிப்பாக பாரிமுனையில் ரவுடிசம் அதிகரித்து வருவதாகவும் இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு தனிநபர் தங்கள் அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடியிசம் செய்து வருவதாகவும் அவர் அரசியல் கட்சி சாராத நபர் என்றாலும் தொடர்ந்து ரவுடிசத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருவதாகவும் கூறினர்.
எனவே இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தினால் வணிகர்களின் பாதுகாப்பு நலன் சார்ந்த விஷயமாக இருக்கும் எனவும் கூறினார்.
