இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 75- வது இந்திய சுதந்திர தின விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்  75- வது இந்திய சுதந்திர தின விழா 


ராமநாதபுரம் ஆகஸ்ட்-15 

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தலைமை கழகத்தின் ஆணைக்கிணங்க மாவட்ட அலுவலகத்தில் 75- வது இந்திய சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  மாநில பொருளாளர் சிறப்பு அழைப்பாளர் ஹாஜி எம்.எஸ்.எ. ஷாஜகான்  ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முகமது, மாவட்ட செயலாளர் முகம்மது பைசல், நகர செயலாளர் ஹதியத்துல்லா, மாவட்ட துணைத்தலைவர் சாதுல்லாகான், மாவட்ட துணைச் செயலாளர் முகமது யாகூப், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதனை அடுத்து ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத்தலைவர் ஹாஜி வருசை முகம்மது, ஊடகப் பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜபார், மற்றும் ஏர்வாடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு  விழாவை சிறப்பித்தனர்.  

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு