திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க   மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க  தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, பொதுச்செயலாளர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்

பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது 

அவர் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும் விவசாயத்தில் லஞ்சம் இருக்கக்கூடாது இடைத்தரகர்கள் தொல்லையும் இருக்கக்கூடாது பெரியகோளாப்பாடி கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது அதை, சிப்காட்டுக்கு கொடுத்துள்ளனர் அதைக் கொடுக்கக்கூடாது விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் குளம் மூடப்படாது என்று மாவட்ட கலெக்டர் உறுதி அளித்துள்ளார். 

போதுமான அளவு யூரியா வரழைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது 6 கிலோ மீட்டருக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் அரசு விவசாயிகளுக்கு 100 கிலோ நெல்லுக்கு 2,500-ம், கரும்புக்கு ரூ.4 ஆயிரம் தருவதாகக் கூறி உள்ளது அதை தருவார்கள் என்று நம்புகிறோம் என்று கூறினார்.