ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.5/விலை உயர்வு..மத்திய அரசின் அறிவிப்புக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டனம்.

 ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.5/விலை உயர்வு..மத்திய அரசின் அறிவிப்புக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டனம்.


2021-22 பருவ கரும்பு ஒரு குவிண்டாலுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்வை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் ஒரு டன் கரும்புக்கு ரூ50/ மட்டும் (FRP) விலை உயர்த்தி ஒரு டன் கரும்புக்கு ரூ.2900/ விலையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒரு டன் கரும்பு விலை ரூ.2850/ வழங்கப்பட்டது.

உரங்களின் விலை ‌, டீசல் விலையை கடுமையாக உயர்த்திய பாஜக தலைமையிலான மத்திய அரசு கரும்பு உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப கரும்புக்கு விலை உயர்த்த வில்லை .

9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5000/ விலை வழங்கவேண்டும்.அனைத்து மாநிலங்களிலும் SAP அறிவித்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய கரும்பு பண பாக்கி .22000 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்காமல் 

 நாடு முழுவதும் உள்ள ஐந்து கோடி கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. 

மத்திய அரசு கரும்பு விலையை உயர்த்தி அறிவிக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டங்களை நடத்திட வேண்டுகிறோம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்