கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று தாக்கத்தைகட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் ஜூலை - 06
ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று தாக்கத்தைகட்டுப்படுத்த தடுப்பூசி முகாம் மருத்துவத்துறை துணை இயக்குநர் மருத்துவர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை மையத்தின் சார்பில் தடுப்பூசி போடப்பட்டது இதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மலர்வண்ணன் மற்றும் மருத்துவர்கள் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி டாக்டர் மனோஜ் குமார் மற்றும் டாக்டர் ராஜேஸ்வரி டாக்டர் முத்தலீஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் எபனேசர் மற்றும் செவிலியர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு
