செய்தித் துறை அமைச்சரை சந்தித்து பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை மனு
தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் சார்பில் மாநில பொதுச்செயலாளர் பொன். வல்லரசு,மாநில துணைத் தலைவர் வி.ரமேஷ் ஆகியோர் மாண்புமிகு தமிழக செய்தி துறை அமைச்சர் திரு. வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பத்திரிகையாளர் நலன் சார்ந்த 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மாவட்டம், தாலுகா வாரியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தகொரோனா கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் கிடைக்க வழிவகை செய்யவும். மூத்த பத்திரிகையாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி அனைத்து சலுகை வழங்கவும், நீண்டகாலமாக பணியாற்றும் முழு நேர பத்திரிகையாளர்களுக்கு அரசின் அங்கீகார அட்டை, செய்தியாளர் அடையாள அட்டை, பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் முழுமையாக வழங்க கோரியும் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
