பதிவு எண் இல்லாமல் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்ய எஸ்.பி உத்தரவு

பதிவு எண் இல்லாமல் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்ய எஸ்.பி உத்தரவு


*பதிவு எண் இல்லாமல் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்ய எஸ்.பி உத்தரவு*

*கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு, பதிவெண் இல்லாமல் சுற்றி திரியும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்*

*கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், கள்ளக்குறிச்சி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.*

*காவல் நிலையத்தில் இருந்த கோப்புகளை பார்வையிட்டு, நகர பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களின் எண்ணிக்கை, தொலைக்காட்சியில் கேமிரா சரியாக தெரிகிறதா என்பதை கேட்டறிந்தார். தொடர்ந்து குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நீண்ட வருடங்களாக நின்று கிடக்கும் வாகனங்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.*

*மேலும் கள்ளக்குறிச்சியில் பதிவெண் இல்லாமல் சுற்றித்திரியும் வாகனங்களை நாளை முதல் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டார்.*

*காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ்,  உட்பட காவலர்கள் பலர் இருந்தனர்.*