பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில்   கையெழுத்து இயக்கம்  மற்றும் ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம் ஜூலை -08 

மத்தியில் ஆளுகின்ற பி.ஜே.பி அரசின்  பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து  மண்டபம் மேற்கு வட்டாரம் இந்திய  காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் ஆபீஸ்  பேருந்து நிலையம் அருகில்  கையெழுத்து இயக்கம்  மற்றும் ஆர்ப்பாட்டம்   நடைபற்றது.  ராமநாதபுரம் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா   தலைமையில்  மண்டபம் மேற்கு  வட்டார காங்கிரஸ்  கமிட்டி பொறுப்பளார் அன்வர் அலி நத்தர்   முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருநூறுரூக்கு மேற்பட்ட  பகுதிகளில்  மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா அறிவுறுத்தலின்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

   மாவட்ட தலைவர் திரு செல்லத்துரை அப்துல்லா அவர்கள் பேசுகையில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் கச்சா எண்ணெய் பேரலுக்கு நூறு டாலருக்கு  மேல் இருக்கும் பொழுது மக்களுக்கு குறைவாக  பெட்ரோல் டீசல் விலை இருந்தது. ஆனால் தற்போது உள்ள மோடி ஆட்சியில் கச்சா எண்ணெய் பேரலுக்கு பாதி  விலையாக குறைந்தபோதிலும்  டீசல் விலை நூறை நெருங்கும் நிலையிலும் பெட்ரோல் விலை நூறை  தாண்டியும் விலை ஏற்றப்பட்டுள்ளது.எரிவாயு விலை ஆயிரத்தை  நெருங்கும் நிலையில்  இதன் காரணமாக அத்துவாசியா பொருட்களின் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது.உடனடியாக மத்திய மோடி அரசு   பெட்ரோல் டீசல் விலை எரிவாயு விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் மத்தியில் ஆளுகின்ற பி.ஜே.பி அரசுக்கு   பொதுமக்களின் எதிர்ப்பை தெறிவிக்க கையெழுத்து இயக்கமும் நடைபெற்று வருவதாக கூறினார்.

   மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம்,மணிகண்டன்,மாவட்ட துணை தலைவர் காமராஜ்,பாலகிருஷ்ணன்,ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கோபால்,  காருகுடி சேகர்,கருப்பையா,பாஸ்கரசேதுபதி,துரைபாண்டி,அன்சாரி,ஹமீது இபுறாஹிம்,சேகு சபியுல்லா,முருகேசன்,தாஜ் தீன்,அஹமது அலி,ஜெமிஸ்கன்,தன்சீர்,அல் அமீன்,நிஷாத் ஆதம்,நாகராஜ், ரெத்தினம்,ராஜேந்திரன்,முனியாண்டி,இக்பால்,கணபதி    ராமநாதபுரம் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள்,கிராம கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பனைக்குளம் காங்கிரஸ் கிளை நிர்வாகி ஹணிப் கான் நன்றியுரை கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் எம்.என்.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் என். அ.ஜெரினா பானு