600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு சிறப்பு அபிஷேகம்
சேலம் மாவட்டம் முதல் அக்ரஹாரம் அருகே அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற மிகவும் சக்திவாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பால் தயிர் மஞ்சள் திரு மஞ்சள் சந்தனம் இளநீர் தேன் பஞ்சாமிர்தம் கரும்புச்சாறு போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து 108 வடை மாலை சாத்தப்பட்டு பச்சை பட்டாடை நறுமண மலர் மாலைகள் கற்கள் பதித்த நகை ஆபரணங்கள் கொண்டு சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர் இதனை தொடர்ந்து நட்சத்திர ஆரத்தி கும்ப ஆரத்தி ஏக தீப ஆரத்தி காட்டப் பட்டது பின்பு குடை விசிறி சாமரம் கண்ணாடி போன்ற பல்வேறு விதமான சோடஷங்களால் சோடச உபசார பூஜை சிறப்பாக நடைபெற்றது.
