வாலாஜா அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், டாக்டர். V. ராமராஜ் நேரில் ஆய்வு!!!!!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ஜுன் 18
பாலாறு அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமில் வாலாஜா தனி வட்டாட்சியர் , (சமூக பாதுகாப்பு திட்டம்,)அ.ஆனந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில்
சென்னை மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், டாக்டர். V. ராமராஜ் இலங்கை அகதிகள் முகாமினை பார்வையிட்டும், மேலும் இந்த முகாமில் 18 வயதிற்குட்பட்ட 410 குழந்தைகளின் நலன் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக குறைகளை கேட்டறிந்தும் , அப்போது முகாம் மக்கள் மேற்கண்ட குழந்தைகளுக்கு சுமார் 85 பேர் தவிர 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை சான்றிதழ் இன்னும் பெறவில்லை எனவும், அதற்கு உடனடியாக சென்னை இலங்கை தூதரகம் மூலம் பெற்று வழங்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் தனியார் பள்ளியில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு கல்விக்கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால் அதனையும் எங்களுக்கு ரத்து செய்யக்கோரியும் கோரிக்கையாக தெரிவித்தனர். அதற்கு இது குறித்து அரசாங்கத்திக்கு தெரியபடுத்தி இக்குறைகளை களைய ஏற்பாடு செய்வதாக கூறினார். மேலும் இந்நிகழ்வின் போது மாவட்ட குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் சங்கேர்த் , வாலாஜா வருவாய் ஆய்வாளர். முத்துக்குமார், மற்றும் திருமலைச்சேரி கிராம நிர்வாக அலுவலர்,. அழகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
