மதுக்கடைகளுக்கு எதிராக இராணிப்பேட்டையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்!

மதுக்கடைகளுக்கு எதிராக இராணிப்பேட்டையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டையில் பாமக வினர் தங்கள் வீடுகளுக்கு முன்பாக நின்று மதுக்கடைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 10ந்தேதேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. பின்னர் ஊரடங்கில் அறிவித்த தளர்வுகளைத் தொடர்ந்து இம்மாதம் 14ந்தேதி முதல் கடைகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியதின் பேரில் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனைகள் நடந்து வருகிறது இந்நிலையில் கடைகளைத் திறந்ததிற்கு எதிராக அரசைக்கண்டித்து பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கையினை வெளியிட்டார் . அதில் இன்று மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு முன்பாக திறந்துள்ள மதுக்கடைகளுக்கு எதிராக தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..