வாலாஜாவில் ஊரடங்கு விதிகளை மீறி நடந்த தொழிலதிபரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர் !

 வாலாஜாவில் ஊரடங்கு விதிகளை மீறி நடந்த தொழிலதிபரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர் !

வாலாஜாவில் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஜுன் 18 

வாலாஜாப்பேட்டையில் பிரபல தொழிலதிபரும்,சமூக ஆர்வலருமான அப்துல் ஷரீப் அவர் தனது பிறந்தநாள் விழாவை அவருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் கோலாகலமாக கொண்டாடினார். அதில் கொரோனா விதிகளான சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறி நடந்த அவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வாலாஜாப்பேட்டை காவல் ஆய்வாளர் பாலுவுக்கு ஆளுயர மாலையணிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது கொரோனாத் தொற்று 2வது அலையின் காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கில், இது போன்று மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளை நடத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் திருமண மண்டபங்களுக்கு தடை விதித்த நிலையில், விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஆடம்பரமாக நடந்த அப்பிறந்த நாள்விழாவைக் காணும் போது சட்டத்தை பாதுகாத்து நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்புள்ள அதிகாரியே, கொரோனா விதிகளை மீறி நடந்த அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது