""வாலாஜா வட்டாட்சியர் தனியார் திருமண மண்டபத்திற்கு அபராதம் வசூல் !!!!
வாலாஜா வட்டாட்சியர் தனியார் திருமண மண்டபத்திற்கு அபராதம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஜுன் 16 வாலாஜாபேட்டை அடுத்த அம்மூர் ரோடு காந்தி நகரில் இயங்கி வரும் தனியார் எம். எம். பி. திருமண மண்டபத்தில் கொரானா
முழு தளர்வற்ற ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு சில கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ள நிலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் விதிமீறி திறந்து வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த எம். எம். பி திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்த வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் ரூபாய். 7000/- அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார் இதில் வருவாய் அலுவலர்கள் மற்றும் வாலாஜா காவல் ஆய்வாளர் பாலு உதவி ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..
