வாலாஜா அருகே இருசக்கர வாகனம் மற்றும் கார் விபத்து!!!

 ""வாலாஜா அருகே இருசக்கர வாகனம் மற்றும் கார் விபத்து!


வாலாஜா ஜுன் 10 

வாலாஜாபேட்டை சர்ச் டிரங்க் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் ராணிப்பேட்டை நோக்கி மிக வேகமாக ஒரு வாலிபர் லாரியை முந்த சென்றபோது லாரியின் பின் சக்கரத்தில் வாகனம் மாட்டிக்கொண்டு அந்த வாலிபர் ரோட்டில் கீழே விழுந்து பயங்கர காயமடைந்தார் பிறகு இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த கார் லாரியின் பின்பகுதியில் ஓங்கி இடித்தது பிறகு காரின் ஒரு பகுதி பயங்கரமாக நொறுங்கியது பின்னர் இத்தனைக்கும் விபத்துக்குள்ளான லாரி ஓட்டி வந்த ஓட்டுநர் லாரியை நிற்காமல் வேகமாக சென்றுவிட்டார் பிறகு பைக்கில் வந்த இந்த வாலிபர் ராணிப்பேட்டை சேர்ந்த ஏடிசன் என்பது தெரியவந்தது இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த பல போலீசார் விபத்துக்குள்ளான காரையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...