எம். எல். ஏ. தங்கப்பாண்டியன் முயற்சியால் திறக்கப்பட்ட மருத்துவமனை

எம். எல். ஏ. தங்கப்பாண்டியன் முயற்சியால் திறக்கப்பட்ட மருத்துவமனை


ராஜபாளையம் தொகுதி தளவாய்புரம் ஊராட்சியில் பல மாதங்களாக பூட்டியிருந்த தளவாய்புரம் ஆ.ச.பழனிச்சாமிநாடார் சுகாதார கூட்டுறவு மருத்துவமனையை திறப்பதற்கு *MLA அவர்களின் தொடர் முயற்சியாலும் நடவடிக்கையாலும்* இன்று மருத்துவமனையை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து  நமது மக்கள் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* இன்று (07.06.2021) காலை செட்டியார்பட்டி வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் முத்துலட்சுமி மற்றும் காவல் ஆய்வாளர் தெய்வீகப்பாண்டியன் அவர்களின் முன்னிலையில் மருத்துவமனையை *திறந்து வைத்து*, MLA அவர்களும் ஒன்றிய *சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும்* மருத்துவமனையை பார்வையிட்டனர்..

 இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், மக்கள் நலன் காக்கும் மருத்துவத்துறையில்  கூடுதல் கவனம் செலுத்திவருகிறார் நமது *தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள*. தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு கூட்டுறவு மருத்துவமனை மட்டுமே உள்ளது , இக்கூட்டுறவு மருத்துவமனையில் பிரசவ மருத்துவர், குழந்தைகளின் நல மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர் மற்றும் ஆய்வகக்கூட வசதி என அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த *கூட்டுறவு துறை அமைச்சர்* , விருதுநகர் மாவட்டத்தில் உள்ள *வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், தொழில்த்துறை அமைச்சர்* அவர்களின் மூலமாக *தமிழக முதல்வர் அவர்களின்* கவனத்திற்கு எடுத்துச்சென்று இக்கூட்டுறவு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் எனக்கூறினார்,

 மேலும் பல வருடங்களாக இராஜபாளையம் கிராமப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த இக்கூட்டுறவு மருத்துவமனை இன்னும் ஓரிரு வாரங்களில் ஏழை எளிய பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருமென MLA அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் தளவாய்புரம் ஊர்த்தலைவர் உதயசூரியன், R.G.செல்லத்துரை கிளை செயலாளர் தங்கமணி, தங்கராஜ் விநாயகமூர்த்தி மயிலேறி,அன்பு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இத்துடன் மருத்துவமனையை திறப்பதற்கான அனுமதிக்கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது.