""வாலாஜாவில் கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் பங்கேற்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ரோட்டரி கிளப் மற்றும் பெல்லியப்பா நகர் வளர்ச்சி சங்கம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்தத் தடுப்பூசி முகாமை அமைச்சர் ஆர். காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 18 வயது முதல் 45 வயது வரை எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்தக் கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டனர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...