""ராணிப்பேட்டை மாவட்ட கொரோனா முழு நிலவரம்!!!?
தமிழக சுகாதாரத்துறை நாள்தோறும் மாவட்ட வாரியாக கொரோனா விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூன் 16) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மேலும், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39348 ஆகவும், சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37144 ஆகவும் உள்ளது. வீடுகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1564ஆக உள்ளது. முக்கியமாக , மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
