வாலாஜா சுங்கச்சாவடியில் ஒப்பந்த மேலாளரை கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!!
ஜூன் 10
வாலாஜாபேட்டை சென்னைசமுத்திரம் பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 400 ஊதியம் என்று சம்பளப் பட்டியலில் ஒப்பந்த தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கும் சால்வாட் நிர்வாகம் தினக்கூலி மற்றும் வாரக் கூலி என மாத சம்பளமாக கூட தொழிலாளர்களுக்கு சால்வாட் நிர்வாகம் வழங்கப்படுவதில்லை.சுமார் மூன்று மாதம் அல்லது நான்கு மாதம் கழித்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள தொகையை முழுவதுமாய் வழங்காமல் 10இல் ஒரு சதவீதம் என்ற அளவில் ரூபாய் 3 ஆயிரம் 2000 என்று சுங்கச்சாவடி பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
எனவே பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமையை அறிந்து சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி அலுவலரை தொடர்பு கொண்டு பேசியபோது சுங்கச்சாவடி அலுவலர் எனக்கும் ஒப்பந்த மேலாளருக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறினார்
ஆனால் அந்த அலுவலர்தான் தங்களை பணியில் அமர்த்தியதாகவும் வேலை வாங்கியதாகவும் சுங்கச்சாவடி சம்பளப் பட்டியலில் அந்த அலுவலர் தான் கையொப்பம் வாங்கினார் ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
பிறகு இந்த நிலைமையைப்பற்றி அவரிடம் கேட்டால் இது சம்பந்தப்பட்ட மேலாளர் சென்னையில் இருக்கிறார் என்று கூறினார் அந்த சுங்கச்சாவடி அலுவலர் நீங்கள் ஒப்பந்த மேலாளரை தொடர்பு கொண்டு கேளுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகிறார் பிறகு சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று சுங்கச் சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் பாலு அவர்கள் வந்து ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுடைய முழு ஊதியத்தையும் தவறாமல் கிடைக்க நான் ஒப்பந்த மேலாளரிடம் பேசுகிறேன் என்று உறுதி அளித்தார். அதன் பிறகு ஒப்பந்த பணியாளர்கள் எல்லோரும் கலைந்து சென்றனர்
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...


