2020..21, ஆம் ஆண்டுக்கான RTE கல்விக் கட்டண பாக்கியை உடனே வழங்கு.... தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே ஆர் நந்தகுமார் கோரிக்கை....

 2020..21, ஆம் ஆண்டுக்கான  RTE கல்விக் கட்டண பாக்கியை உடனே வழங்கு.... தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே ஆர் நந்தகுமார் கோரிக்கை....


 2020..21ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத மாணவர்கள் 8.50 லட்சம் மாணவர்களைசேர்த்திட்ட வகையில் மத்திய மாநில அரசுகள் தர வேண்டிய கல்விக் கட்டண பாக்கியை தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டியும்,ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கு வாழ்வாதார நிதி வழங்கிட வேண்டும், மேலும் உடனடியாக பள்ளிகளைத் திறக்க வேண்டியும் கோரிக்கை விண்ணப்பம் ..... 

தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்

தமிழக முதல்வராக பொறுப்பேற்று மிக சிறப்பாக செயல்பட்டு வரும் தளபதியார் அவர்களின் தலைமையிலான தமிழக அமைச்சரவைக்கு எங்கள் மாநில சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த கொடிய நோய் தொற்று காலத்தில் கூட மிகச் சிறப்பாக பணியாற்றி இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாய் நோய்த்தொற்றை தடுப்பதிலும் மக்கள் வாழ்வை பாதுகாப்பதிலும் முன்னிலை வகித்து வரும் தங்கள் சீரிய பணிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தில் தரமான கல்விக்கு தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் கடந்த 15 மாதங்களாக பள்ளிகள் திறக்காமல் பாடம் நடத்தாமல் கல்விக் கட்டணம் வசூலிக்க முடியாமல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 75 சதவீத கல்வி கட்டணத்தை 75 சதவீத பெற்றோர்கள் செலுத்தாததால்....

( நர்சரி பிரைமரி பள்ளிகளில் ஒரு சதவீத கட்டணம் கூட தமிழகத்தில் எங்கும் வசூல் ஆகவில்லை என்பதை மெத்த பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் )

 இதர பள்ளிகள்  வெறும் 25 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு கடந்த 15 மாதங்களாக சொல்லொணாத் துயருக்கு ஆளாகி உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களையும் நிர்வாகத்தையும் பாதுகாத்திட..... அவர்களுக்கு வாழ்வாதார நிதி வழங்குங்கள் என்று தொடர்ந்து வேண்டி கேட்டு வருகின்றோம்.

 எமது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் நாள்தோறும் தினசரி கூலி வேலைகளுக்கும் இன்ன பிற வேலைகளுக்கும் சென்று வருகிறார்கள்.

 வாழ்விழந்து நிற்கும் அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி....

 தமிழகத்தில் இன்று கோவில் பூசாரிகளுக்கு காவல்துறை மற்றும் பத்திரிக்கையாளர்

களுக்கும்  திருநங்கைகளுக்கும் வாழ்வாதார நிதி வழங்கி வரும் தமிழக அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டுகின்றோம்.

 நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, வழங்குவது போல் வாழ்வாதார நீதியை தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கும்  வழங்குங்கள் என்று வேண்டுகின்றோம்.

மேலும் தமிழகத்தில் சுயநிதி அடிப்படையில் செயல்பட்டு வரும் தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகளில்  அனைவருக்கும்

இலவச கட்டாய கல்வி சட்டப்படி 8.50 லட்சம் மாணவர்களை சேர்த்து கல்வி கற்பித்த வகையில் கடந்த 2020.. 21 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டண பாக்கி மத்திய மாநில அரசுகள் தர வேண்டிய ரூபாய் 500 கோடியை  தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டி உடனடியாக வழங்கி உதவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள் அனைவரையும் எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மெத்த பணிவோடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம். என்று தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்