மேட்டுப்பாளையம் அரசுமருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஏ. கே. செல்வராஜ் ஆய்வு

மேட்டுப்பாளையம் அரசுமருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஏ. கே.  செல்வராஜ் ஆய்வு


மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இன்று 28/5/2021 மாலை 5:00 மணிக்கு அனைத்து அரசியல் பொதுநல அமைப்புகள் நிர்வாகிகள் அரசு மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக அமைக்கக் கூடாது என ஆலோசனை நடத்த ஒன்று கூடினர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் அவர்களும் அதிமுக நகர செயலாளர் வான்மதி சேட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.*

*மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும் பிரசவத்திற்கு வரும் தாய்மார்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வதாகவும், தற்காலிமாக தடுப்புகள் அமைத்துக் கொள்வதாகவும் அரசு மருத்துவமனை பொருப்பு மருத்துவர்கள் Dr.சரவணன் மற்றும் Dr.மனோகரன்  வட்டாட்சியர் திருமதி ஷர்மிளா, Ri சத்யராஜ் ஆகியோர் உறுதியளித்துள்ளதன் அடிப்படையில் தற்காலிகமாக எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இந்நிகழ்வில் CITU தோழர் பாஷா, தபெதிக சந்திரசேகர் ,A.S.ஷபீக் அஹம்மது,SDPI நவ்ஃபல் ,வழக்கறிஞர் காபா ரகுமான் ,ஜீவ சாந்தி அப்துல் ரஜாக்,தோழர் ராஜா சாகுல் ,தோழர் பீர்முகமது ,தோழர் சியாம் ,MH சம்சுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்*.