ஆதாரில் முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனிலேயே மாற்றி கொள்ளலாம்..விரிவான தகவல்கள்..,!

ஆதாரில் முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனிலேயே மாற்றி கொள்ளலாம்..விரிவான தகவல்கள்..,!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி வீடு மாறுவது இயல்பான ஒன்று. இவர்கள் வங்கி கணக்கு, அரசின் நலத்திட்ட சலுகைகள் பெற ஆதார் அட்டையில் முகவரி முக்கியமாகும். இவர்கள் முகவரி மாற்ற வங்கிகளுக்கோ, ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இனி ஆன்லைனிலேயே முகவரியை மாற்றிக் கொள்ளலாம். எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

தற்போதைய நிலையில் வங்கி கணக்கு, பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரி கணக்கு இப்படி பல சேவைகளில் ஆதார் கட்டாயமாகும்.

ஆனால் இந்த ஆதார் கார்டில் ஏதேனும் சிறிய பிரச்சனை என்றாலும், முன்பெல்லாம் ஆதார் மையங்களை நோக்கி செல்ல வேண்டியிருந்தது. உங்களது ஆதாரில் முகவரி மாற்றமோ அல்லது பெயர் மாற்றமோ செய்வதற்கு நீங்கள் ஆதார் மையங்களை நோக்கி செல்ல வேண்டியிருந்தது.

என்ன செய்ய வேண்டும்

இனி அந்த கவலை வேண்டாம். வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் வீடு மாறிய பின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவது எளிதாகும். இதற்காக ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டாம். ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற விரும்பினால், UIDAI இன் அதிகாரப்பூர்வ தளமான https://uidai.gov.in -க்கு சென்று மாற்றலாம்.

என்ன வேண்டும்

முதலில் https://uidai.gov.in/ என்ற அரசு இணையத்தினை திறக்க வேண்டும். அதில் மெனு பாரில் My Aadhar என்பதை கிளிக் செய்யவும். இதன் பிறகு update my address என்பதை கிளிக் செய்து கொள்ளவும். இதில் முகவரி மாற்றம் செய்ய விரும்பினால், இருப்பிட சான்றிதழ், கேஸ் ரசீது, பாஸ்போர்ட் அல்லது வாடகை ஒப்பந்தத்தின் PDF நகல் அவற்றில் ஏதாவது வேண்டும்.

இத்துடன் கட்டாயம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியமாகும். ஏனெனில் நீங்கள் ஆதாரில் முகவரி மாற்றம் செய்தால் உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையெனில், உங்களால் முகவரியை மாற்றம் செய்ய முடியாது.

உங்களுக்கு வரும்

இதன் பிறகு address Validation letter உங்களது முகவரிக்கு (secret code -வுடன் இருக்கும்) போஸ்டலில் அனுப்பபடும். அதன் பிறகு மீண்டும் UIDAI-யின் இணையத்தினை லாகின் செய்து procedd to update address என்பதை கிளிக் செய்யவும். இப்பொது அப்டேட் அற்றஸ் என்பதை secret code-னை கொடுத்து அப்டேட் செய்யவும். இந்த secret code உங்களுக்கு அனுப்பட்ட போஸ்டலில் இருக்கும். நீங்கள் முகவரி மாற்றம் செய்ய கட்டாயம் இந்த secret code தேவைப்படும்.

இந்த secret code-னை கொடுத்த பிறகு நீங்கள் உங்களது முகவரி பக்கத்தினை preview செய்து பார்த்த பிறகு, சப்மிட் செய்யவும். முகவரி மாற்றத்திற்கான ஆவணங்களையும் நீங்கள் அப்லோட் செய்ய வேண்டும். ஆக இருந்த இடத்தில் இருந்து கொண்டே நீங்கள் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். எனினும் சரியான ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். நீங்கள் அப்டேட் செய்த பிறகு அதனை https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/என்ற இணையத்தில் மூலம் மாறியுள்ளதா என பார்க்கலாம். இதற்காக் நீங்கள் URN or SRN நம்பரை கொடுத்து லாகின் செய்து பார்த்துக் கொள்ளலாம். சில நாளில் மாறிவிடும்