நாங்க காய்ச்சுற சாராயம் குடித்தால் கொரோனா வராது!!!! அடித்து துவம்சம் செய்த போலீஸ் படை!!!!
நாடே கொரோனா பீதியில் ஓடிக்கொண்டிருக்கிறது, ஆனால் திருப்பத்தூர் மாவட்ட குக்கிராமப் பகுதிகள் பலவற்றில் பட்டை சாராயம் காய்ச்சும் தொழிலை அமோகமாக செய்து வருகின்றனர்
அதிலும், நாங்க காய்ச்சுற சாராயம் குடித்தால் கொரோனா வராது என்று சொல்லி மினி டேங்கர்களில் பட்டை சாராயத்தை சப்ளை செய்து வருகிறார்கள் போலிசாரும் அவர்களால் ஆன வரையுக்கும் ரைய்டு நடத்தி சாராய உலைகளையும், அடுப்புகளையும் அழித்து வருகிறார்கள் இந்நிலையில் தான் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் கள்ள சாராயம் காய்சுவதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் வாணியம்பாடி டி.எஸ்.பி பழனி செல்வம், மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி ஆகியோர் தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் ரைய்டு புறப்பட்டனர்.
தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் உள்ள கொற்றி பள்ளம், நாயன செருவு பகுதிகளுக்கு பார்ட்டி சகிதமாக சென்ற போது அங்கு சாராயம் காய்சப்படுவது உறுதியானது போலீசார் ரைய்டு வருவதை சிக்னல் மூலமாக தெரிவிப்பதற்காகவே சிறார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். அப்படியிருக்க போலிஸ் ரைய்டு வந்ததை அவர்கள் சாராய பார்ட்டிகளுக்கு மெஸேஜ் செய்யவே அனைவரும் தப்பிவிட்டனர் பின்னர் அங்கு சென்ற போலீசார், நான்கு ழிகளில் சேமித்து வைத்திருந்த 10 ஆயிரம் லிட்டர் கள்ள சாராய ஊறலையும், 250 லிட்டர் கள்ளசாராயத்தையும் அழித்தனர்
மேலும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த பெருமாள், பொன்னுசாமி,சின்ன தம்பி ஆகிய 3 பேரை போலீசார் தேடுவதாக சொல்கிறார்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் மது கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வந்து வாணியம்பாடி பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதும், தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் கள்ள சாராய காய்ச்சும் தொழிலும் அதிகரித்து வருகிறது இந்நிலையில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ரூ.5 லட்சம் மதுபாட்டில்களை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் குழுவுடன் சேர்ந்து நேரில் சென்று பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
அதே போல் வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் கடந்த ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்காண லிட்டர் சாராய ஊறல் அழித்து உள்ளனர். மேலும் வெளி மாநில மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது எதுவானாலும், இன்பார்மர்களை கட்டுபடுத்த முடியாததால் போலிசாரின் ரைய்டு குறித்து சாராய பார்டிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

