ஊடகங்களின் முகத்தில் உமிழ்ந்த விவேக் குடும்பத்தினர்

ஊடகங்களின் முகத்தில் உமிழ்ந்த விவேக் குடும்பத்தினர்



 நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இல்லத்தில் அவரது மனைவி அருள் செல்வி மற்றும் இளையமகள் தேஜஸ்வினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்... 

எனது கணவர் நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மறைந்துவிட்டார். 

எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த மத்திய மாநில அரசுகளுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

எனது கணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

காவல்துறை மற்றும் ஊடத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

இறுதிவரை நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

காவல்துறை மரியாதை தனது கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி கூறியுள்ளார். 

நடிகர் விவேக் குடும்பத்திலிருந்து பிரஸ்மீட் என்றவுடன் இன்றைக்கு பலசரக்கு கிடைக்கும் என்று ஓடிவந்த அவர்களுக்கு ஒன்றும் இல்லாமல் போனது வேதனையாக இருக்கின்றது.

E ஐ இரும்பாக்கி பேனை பெருமாள் ஆக்கும் வித்தை கற்றவர்களுக்கு நன்றி வணக்கம் என்று சொன்னவுடன் எதுவும் கேட்க தோன்றவில்லை .ஏதாவது கிடைக்கும் என்று நோண்டி பார்த்தவர்களுக்கு எதுவும் கிடைக்காதது ஏமாற்றம் தான்.

நடிகர் விவேக் இறந்தபோது மன்சூரலிகான் பேசிய பேச்சு பெரிய புரட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அதை ஊடகங்களில் வெளியிட்டு உசுப்பேற்றி பார்த்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும்  நடக்காததால் பொசுக்கென்று போய்விட்டார்கள்.

தானாக தப்பித்தவறி போர்வெல்லில் சென்று ஒரு குழந்தை  மாட்டிக்கொண்டால் அடிமுதல் நுனிவரை காட்ட கூடியவர்கள் மக்களின் உணர்ச்சிகளை வேறுவிதமாக தூண்ட கூடியவர்கள் மாபெரும் நடிகனின் மரணத்தை சும்மாவா விடுவார்கள். நல்லவேளை யாரும் பிடி கொடுக்கவில்லை.

அவர்களின் குடும்பத்தில் யாராவது ஒருவர் லூஸ் டாக் செய்து இருந்தால் கூட அதை பெரிதாக்கி அரசியல் செய்திருப்பார்கள். அனைவருக்கும் நன்றி வணக்கம் என்று அவர்கள் ஒற்றை வார்த்தையில் கூறியிருப்பது ஒட்டுமொத்த ஊடகத்தின் முகத்தில் காரி உமிழ்ந்தது போல் உள்ளது.

ஊடகங்களுடன் அதிகம் பேசாது இருப்பதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி.