2020.. 21 ஆம் கல்வி ஆண்டுக்கானஆர். டி. இ. கல்வி கட்டண பாக்கியை உடனே வழங்கிட.. ஜூன் மாதம் 2 ஆம் தேதி பள்ளிகளை திறக்க கோரி தமிழக ஆளுநருக்கு நந்தகுமார் கோரிக்கை....

2020.. 21 ஆம் கல்வி ஆண்டுக்கானஆர். டி. இ. கல்வி கட்டண பாக்கியை உடனே வழங்கிட.. ஜூன் மாதம் 2 ஆம் தேதி பள்ளிகளை திறக்க  கோரி தமிழக ஆளுநருக்கு நந்தகுமார் கோரிக்கை....



 தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து வகை நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் மத்திய மாநில அரசின் ஆணைகளுக்கு உட்பட்டு அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டப்படி 25 சதவீத மாணவர்கள் சேர்த்திட்ட  வகையில் 2020.. 21 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டண பாக்கியை மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தங்களின் மேலான கவனத்திற்கு பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

 இந்தக் கொடியகொரோணா  நோய்தொற்று காலத்தில் கூட தனியார் பள்ளிகள் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை

 தக்கவைத்துக் கொள்வதற்காக தரமான கல்வியை அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்கிற லட்சிய வேட்கையோடு  பெற்றோர்களிடம்  எந்தவித கல்வி  கட்டணமும் வசூல் செய்ய முடியாத சூழ்நிலைகள் இருந்தபோதும் இடைநிற்றல் இல்லாமல் அனைவருக்கும் இணையதள வழியாக கல்வி கற்பித்தலும் கற்றலும் கால தாமதமின்றி  நடைபெற்றதை தாங்கள் அறிவீர்கள்.

  கடந்த மார்ச் மாதம் முதல் இன்று ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ந்து கல்வியும் ஆன்லைன் மூலம் வாராந்திர மாதாந்திர காலாண்டு அரையாண்டு

 முழுஆண்டு  தேர்வுகளும் பல்வேறு கலைத்திறன் போட்டிகளும் நடத்தி மாணவர்களின் கல்விச்

செயல்பாடுகளை  உறுதிசெய்து இருக்கின்றோம்.

 இந்தச் சூழ்நிலையில் எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில்   தத்தளித்து வருகிறார்கள்...

அவர்களின்  வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட இக்கொடிய நோய் தொற்று காலத்தில் கூட  அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத மாணவர்களை  சேர்த்திட்ட வகையில் மத்திய மாநில அரசுகள்  2020..21 ஆம் ஆண்டுக்கான தர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை  உடனடியாக தந்தால் தான்  எங்கள் பள்ளி ஆசிரியர் பெருமக்கள்  பசியாற  முடியும்.

 எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும்

தரவேண்டிய கல்வி கட்டண பாக்கியை உடனடியாகதந்துதவ வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

 மேலும் 2021..22 ஆம் கல்வியாண்டில் ஜூன் மாதம்  2 ஆம் இரண்டாம் தேதி  பள்ளிகள்திறப்பதையும்

பாடங்கள் நடத்துவதையும்  புதிய பழைய மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்யவும் மாணவர்களுக்கு வழங்க  வேண்டிய பாடப்புத்தகம் நோட்டு புத்தகங்கள் இன்ன பிறவற்றை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆர்டர் தந்து வாங்கித் தரவும் மாணவர்கள் அவர்களுக்குரிய சீருடையை தயாராக வைத்துக் கொள்வதற்கும் எங்கள் பள்ளி வாகனங்களை பழுது நீக்கி தகுதி சான்று பெற்று சாலைகளில் இயக்குவதற்கான சூழலை நம்பிக்கையை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் தமிழக அரசும்

பள்ளி கல்வித்துறை யும்  உடனடியாக  அரசாணையாக பத்திரிக்கை வாயிலாக பொதுமக்களுக்கு  தெரிவிக்க வேண்டும்

 என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் மற்றும் மாநில தலைவர் கனகராஜ் மாநில பொருளாளர் முனைவர் நடராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.